திறன் பல்கலைக்கழகம் தமிழகத்தில் அமைக்கப்படும் அமைச்சர் பாண்டியராஜன் தகவல் 

யுனெஸ்கோ, ஒன்றுக்கும் மேற் பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட் டுக்கான தேசிய நிறுவனம், கிறிஸ் டோபல் பிளெண்டன் மிஷன் இணைந்து நடத்தும் மாற்றுத்திற னாளி குழந்தைகளின் கல்வி நிலை பற்றிய 2019-ம் ஆண்டுக்கான ஆய் வறிக்கை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற் றது. விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியரா ஜன் பங்கேற்று ஆய்வறிக்கை நூலை வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மாற்றுத்திற னாளிகள் கல்விக்காக பல மாநிலங் களில் செயல்படுத்தப்படும் திட்டங் கள், மற்ற மாணவர்களோடு மாற்றுத்திறனாளி மாணவர்களை படிக்க வைப்பது உள்ளிட்டவை குறித்து ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறன் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விழாவில் பங்கேற்றவர்கள் வைத்தனர். இந்தியாவில் தற்போது 6 திறன் பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் திறன் பல்கலைக்கழகம் அமைக்க, முதல்வரிடம் கருத்துரு சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment