சென்னை பல்கலை.யில் நெட் தோ்வு இலவச பயிற்சி

இந்திய பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக் கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். அதன்படி நடப்பு ஆண்டுக்கான நெட் தேர்வு தேசிய தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் டிசம்பர் மாதம் நடத்தப்பட உள் ளது. இந்த தேர்வுக்கான இணைய தள விண்ணப்பப்பதிவு கடந்த செப்.9-ம் தேதி தொடங்கியது. விருப்பமுள்ளவர்கள் அக்டோபர் 9-ம் தேதி வரை விண்ணப்பிக் கலாம். தகுதியானவர்களுக்கு ஹால்டிக்கெட் நவம்பர் 9-ல் வெளியிடப்படும்.

இந்நிலையில் நெட் தேர்வுக் கான இலவச பயிற்சி வகுப்பு சென்னை பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட உள்ளது. இதில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி உட்பட பிரிவை சேர்ந்த மாணவா் கள் மட்டுமே பங்கேற்க முடியும்.

அக்டோபா் 19 முதல் நவம்பா் 17-ம் தேதி வரை பயிற்சி நடத்தப்படும். இதற் கான விண்ணப்பங்களை பல் கலைக்கழக இணையதளத் தில் (www.unom.ac.in) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள லாம்.

பூா்த்தி செய்த விண்ணப்பங் களை சமா்பிக்க அக்டோபா் 16-ம் தேதி கடைசி நாளாகும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment