உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

கல்வி உதவி தொகைக்கான தேர்வு அரசு அறிவிப்பு

அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்ட செய் திக்குறிப்பு:

தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவி திட்டத்தின்கீழ் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

அதன்படி நடப்பு ஆண்டு உதவித்தொகை பெறுவதற்கு தகுதியான மாணவர்களை தேர்வு செய்வதற்காக என்எம்எம்எஸ் தேர்வு வட்டார அளவில் டிசம்பர் 1-ம் தேதி நடைபெற உள்ளது.

இதற்காக மாணவர்களிடம் இருந்து கடந்த செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 11-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

தற்போது விண்ணப்பித்த வர்களின் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக அக்டோபர் 21 முதல் 31-ம் தேதி வரை பதிவு செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, பள்ளி தலைமை ஆசிரியர்கள் தாமதமின்றி பணிகளை முடிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment