தீபாவளியன்று கனமழை பெய்யும்?

தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் வருகிற 27-ந்தேதியன்று தீபாவளி பண்டிகை நாளில் மழை பெய்யுமா? என்பது பற்றி வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் வருகிற 23-ந் தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழை இருக்கும். அதனைத் தொடர்ந்து 24-ந்தேதி அந்த மழை சற்று குறைந்து காணப்படும். பின்னர், 25, 26 மற்றும் 27-ந் தேதிகளில் மீண்டும் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழை இருக்கும் என்றே தற்போது கணிக்கப்பட்டு உள்ளது? என்றனர்.

No comments:

Post a Comment