கோவைபாரதியார்பல்கலைக்கழகத்தின் எம்.ஃபில்., பிஹெச்.டி. (எக்ஸ்டர்னல்) எழுத்துத் தேர்வுக்கான தேர்வு மையங் கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாரதியார் பல்கலைக்கழகத்தின் எம்.ஃபில்., பிஹெச்.டி. பட்ட எழுத்துத்தேர்வுகள் நவம்பர் 25,27,29-ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பல்கலைக்கழகத் துறைக் ளின் அனைத்துபாடப்பிரிவுமாணவர்கள், எக்ஸ்டர்னல்பிஹெச்.டி. அனைத்து பாடப் பிரிவு மாணவர்கள், பெங்களூரு, மைசூரு ராணுவ ஆராய்ச்சி மைய மாணவர்கள் பாரதியார் பல்கலைக்கழக வளாகத் தில் அமையும் தேர்வு மையத்தில் தேர்வு எழுத வேண்டும். கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், பதிவு பெற்ற ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் டாக்டர் என்.ஜி.பி. கலை, அறிவியல் கல்லூரி சரியிலும், தாராபுரம், உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளைச் சேர்ந்த வர்கள் உடுமலை கமலம் கலை, அறிவியல் கல்லூரியிலும், திருப்பூ ரைச் சேர்ந்தவர்கள் திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியிலும், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உதகை அரசு கலைக் கல்லூரியிலும், ஈரோடு மாவட்ட மாணவர்கள் ஸ்ரீ வாசவி கல்லூரியிலும், தில்லி ஆளுகைக்கு உள்பட்ட ராணுவ ஆராய்ச்சி மைய மாணவர்கள் லக்னெள சாலையில் உள்ள டி.ஐ.ஏ.எஸ். வளாகத்தில் அமையும் மையத்திலும் தேர்வு எழுத வேண்டும். தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டமாணவர்களின் தேர்வுக்கூடஅனும் திச் சீட்டுகள் மேற்கண்ட மையங்களில் நவம்பர் 20-ஆம் தேதி முதல் அரசு வேலைநாள்களில் வழங்கப்படும் என தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி (பொறுப்பு) ஆர்.விஜயராகவன் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment