விஜயதசமியில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி 

விஜயதசமி தினமான அக்டோபர் 8-ம் தேதி அரசுப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் மாண வர் சேர்க்கை நடத்திக் கொள்ள பள்ளிக் கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வியின்கீழ் இயங்கும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க் கையை கடந்த செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடித்துக் கொள்ள பள்ளிக் கல்வித் துறை அறிவித் திருந்தது.

இந்த சூழலில் அக்டோபர் 8-ம் தேதி விஜயதசமி தினம் வருகிறது. அன்றைய தினத்தில் தங்கள் குழந்தைகளை பள்ளி களில் சேர்த்து கற்றலை தொடக்கி வைக்க பெற்றோர் விரும்புகின்றனர்.

இதையடுத்து விஜயதசமி நாளில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத் திக் கொள்ள தலைமை ஆசிரி யர்களுக்கு கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.

மேலும், தமிழக அரசு சார்பில் அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்பட்டுள்ள மழலையர் வகுப்புகளில் மாணவர்களை சேர்க்கலாம்.

3 வயது குழந்தைகளை மழலையர் வகுப்புகளி லும், 5 வயது நிரம்பிய குழந்தை களை அரசுப் பள்ளிகளில் 1-ம் வகுப்பிலும் சேர்க்க வேண் டும்.

இதுவரை குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்காத பெற் றோர், இந்த வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment