உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

பள்ளிகளில் நீர் மேலாண்மையை கடைபிடிக்க சிபிஎஸ்இ உத்தரவு வழிகாட்டுதல்களுடன் சுற்றறிக்கை வெளியீடு

அனைத்து வகை பள்ளிகளும் நீர் மேலாண்மையை கட்டாயம் பின் பற்ற வேண்டும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பாடத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 21 ஆயிரம் பள்ளிகள் இயங்குகின்றன. இந்த பள்ளிகளில் 62 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

இதற்கிடையே நம் நாட்டில் டெல்லி, சென்னை உட்பட 21 நகரங்களில் நிலத்தடி நீர் மட்டம் 2020-ம் ஆண்டுக்குள் அபாய நிலைக்கு சென்றுவிடும் என்று சமீபத்தில் நிதி ஆயோக், தன் ஆய்வறிக்கையில் தெரி வித்திருந்தது. இந்நிலையில் அனைத்து பள்ளிகளும் நீர் மேலாண்மை திட்டத்தை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சிபிஎஸ்இ வாரியத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட் டுள்ள சுற்றறிக்கையில், ‘‘தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாக பள்ளிகள் இனி நீர் மேலாண்மையை கட்டாயம் பின் பற்ற வேண்டும்.

அதன்படி பள்ளிகளில் உள்ள பழைய தண்ணீர் குழாய்களை மாற்றி புதிய குழாய்களை தானியங்கி முறையில் செயல்படும் வகையில் அமைக்க வேண்டும். தண்ணீர் குழாய்களில் கசிவு இருந்தால் உடனே சரி செய்ய வேண்டும். மழைநீர் சேமிப்பு கட்டமைப்பை சிறந்த முறையில் வைத்திருக்க வேண்டும் என்பன வழிகாட்டுதல்களை பள்ளிகள் கடைபிடிக்க வேண்டும்.

நீர் மேலாண்மை கமிட்டி

இதேபோல், இணைப்பு பள்ளி களையும் அடுத்த 3 ஆண்டுகளில் தங்களுக்கு தேவையான தண் ணீரை சேகரித்துக் கொள்ளும் நீர் திறன் பள்ளியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை கண்காணிக்க மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை இணைத்து ‘நீர் மேலாண்மை கமிட்டி’ அமைக் கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு பள்ளிகளில் தண்ணீர் பயன்பாடு, வீணாகும் நீர் குறித்து ஆய்வு செய்து அதுகுறித்த விழிப் புணர்வு நடவடிக்கைகளை மேற் கொள்ளும்’’ என்று கூறப்பட் டுள்ளது.பள்ளிகளில் தண்ணீர் பயன்பாடு, வீணாகும் நீர் குறித்து நீர் மேலாண்மை கமிட்டி ஆய்வு செய்து அதுகுறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

No comments:

Post a Comment