புதுவை அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

புதுவை அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டது.
புதுவை அரசு துறையில் குரூப் ஏ, பி, சி பிரிவுகளில் ஊழி யர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் குரூப் பி, சி பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை மாநில அரசு அறிவித்தது. தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளதால், போனஸ் அறிவிப்பை முதல்வர், அமைச்சர்கள் வெளியிடவில்லை.

இதற்குப் பதிலாக அரசின் நிதித் துறைக் கண்காணிப் பாளர் ரவீந்திரன் தீபாவளி போனஸ் தொடர்பான உத்த ரவை வெளியிட்டார். அந்த உத்தரவில், மத்திய அரசின் உத்தரவை சுட்டிக்காட்டி, புதுவை அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி, புதுவை அரசின் குரூப் சி பிரிவில் பணியாற் றும் ஊழியர்களுக்கும், குரூப் பி பிரிவில் அரசிதழில் பதிவு பெறாத ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸாக அதிகபட் சமாக ரூ.6 ஆயிரத்து 908 கிடைக்கும். இதுதவிர, 3 ஆன் டுகள் பணி முடித்த தினக்கூலி உள்ளிட்ட கடைநிலை பிரிவு ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1,184 போன ஸாக கிடைக்கும். சுமார் 20 ஆயிரம் ஊழியர்களுக்கு இந்த போனஸ் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட் டுள்ளதால், அரசுக்கு ரூ.20 கோடிக்கு மேல் கூடுதல் செல வாகும். அதே நேரத்தில், அரசு சார்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டிய போனஸ் தொகை குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. தேர்தல் நன்னடத்தை விதி கள் வருகிற 27-ஆம் தேதி மாலை வரை அமலில் இருப்ப தால், இதுதொடர்பான முடிவை எடுப்பதில் சிக்கல் எழுந் திருப்பதாகக் கூறப்படுகிறது. தீபாவளிக்கு இன்னும் 4 நாள் களே உள்ள நிலையில், அரசு சார்பு நிறுவன ஊழியர்களும், கூட்டுறவு நிறுவன ஊழியர்களும் போனஸ் அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.

No comments:

Post a Comment