முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 ஆகிய பணியிடங்களை நிரப்புவதற் கான போட்டித் தேர்வுகள் கடந்த செப்.27, 28 மற்றும் 29 ஆகிய 3 நாட்கள் நடைபெற்றன.

154 தேர்வு மையங்களில் 1 லட்சத்து 46 ஆயிரத்து 580 பேர் தேர்வு எழுதினர். இவர் களுக்கான விடைத்தாள்கள் செப்.30-ம் தேதி வெளியாகின.

தமிழ் உள்ளிட்ட 13 பாடங் களுக்கான தேர்வு முடிவுகளை மதிப்பெண் பட்டியலுடன் கடந்த அக்.18-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

இந்நிலையில், கணிதம், வேதி யியல், விலங்கியல், பொருளா தாரம், வரலாறு ஆகிய பாடங் களுக்கான தேர்ச்சி முடிவுகள், மதிப்பெண் பட்டியல்கள், ஆசிரி யர் தேர்வு வாரியத்தின் http:// trb.tn.nic.in என்ற இணையதளத் தில் நேற்று வெளியாகியுள்ளன.

தேர்ச்சி பெற்றவர்களுக் கான சான்றிதழ் சரிபார்ப்பு தொடர் பான அறிவிப்பு தொடர்ந்து வெளியாகும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள் ளது.

No comments:

Post a Comment