சென்னையில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்

சென்னை கிண்டியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதுகுறித்து, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை பொறுப்பு இயக்குநர் வே.விஷ்ணுவெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னையில் உள்ள அனைத்து வேலை வாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை வெள்ளிக்கிழமை நடத்த உள்ளன. அதன்படி, கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை (11.10.2019) காலை 10 மணி முதல் பிற்ப கல் 2 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில், 35 வயதுக்குட்பட்ட 8-ஆம் வகுப்பு முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரையும், ஐடிஐ மற்றும் தொழில் நுட்டப் படிப்புகள் முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மாற்றுத்திறனாளிகள் உள்பட பங்குபெற்று தகுதிக்கேற்ற பணி வாய்ப்பை பெறலாம். அதே போல் இதில் பங்கு பெற்று பணி யாள்களைத் தேர்வு செய்ய விரும்பும் நிறு வனங்கள், முழுமையான காலிப் பணியிட விவரங்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment