அரசு பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் எந்த பள்ளிகளில் படிக்கின்றனர்? விவரங்களை பதிவேற்ற உத்தரவு

அரசு, அரசு உதவி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் கள் தங்கள் பிள்ளைகள் பற்றிய விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் (எமிஸ்) பதிவேற்ற வேண் டும். இதற்காக எமிஸ் இணையதளத்தில் ‘ஆசிரியர் களின் குழந்தைகள் தளம்’ என்ற புதிய பக்கம் உருவாக்கப் பட்டுள்ளது. இந்த பக்கத்தில் உங்கள் பிள்ளைகள் யாரா வது அரசுப்பள்ளியில் பயில்கிறார்களா என்ற கேள்வி இடம் பெற்றிருக்கும். அதை தேர்வு செய்தால் ஆம், இல்லை, பொருந் தாது என 3 தேர்வு வாய்ப்புகள் இருக்கும். அதில் திருமண மாகாதவர் அல்லது பிள்ளைகள் பட்டப்படிப்பு படிக்கின்றனர் எனில் பொருந்தாது என்ற பதிலை தேர்வு செய்ய வேண்டும்.

மற்றவர்கள் ஆம் அல்லது இல்லை என உரிய பதிலை தெரிவிக்க வேண்டும். அரசுப்பள்ளி இல்லை எனும்பட் சத்தில் படிக்கும் இதர பள்ளியின் விவரங்களை குறிப்பிட வேண்டும். அதன்படி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் உடனே எமிஸ் இணைய தளத்தில் தங்கள் பிள்ளைகள் பற்றிய விவரங்களை பதிவு செய்து முடிக்க வேண்டும். இதுதொடர்பான வழிகாட்டுதல் களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் வாயிலாக அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment