தமிழகம், புதுச்சேரியில்  வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கும் தெற்கு மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு கட லோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகம், கேரளா ஆகிய பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை நாளை (அக்.17) தொடங்க வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு கட லோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா, கேரளா ஆகிய பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை நாளை (அக்.17) தொடங்க வாய்ப்புள்ளது.

இதனால் தமிழகத்தில் அடுத்த 2 நாட் களுக்கு பெரும்பாலான மாவட்டங் களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ண கிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

நாளை மற்றும் நாளை மறுநாள் (அக்.17, 18) மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல், லட்சத்தீவு ஆகிய பகுதி களில் சூறைக்காற்று வீசும் என்பதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படு கிறார்கள்.

சென்னையில் வானம் மேகமூட் டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 93 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 80 டிகிரியாகவும் இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மாக வைகுண்டத்தில் 80 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடி, தொண்டியில் 70 மி.மீ., கோத்தகிரியில் 60 மி.மீ., கேத்தியில் 50 மி.மீ., குந்தா அணை, செம்பரம்பாக்கம், அம்பாசமுத்திரம், பூந்தமல்லி, குன்னூர், கன்னியாகுமரியில் தலா 40 மி.மீ., அரவக்குறிச்சி, மயிலாடுதுறை, ஊத்தங்கரை, பொள்ளாச்சி, சோழவரம், சிவகிரி, தென்காசி, மணிமுத்தாறு, நாகர்கோவில், ஆர்.எஸ்.மங்கலம், தாம்பரம், மணியாச்சி, ராயக்கோட்டை, ஓட்டப்பிடாரம், பெருந்துறை, ராதாபுரம் ஆகிய இடங்களில் தலா 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment