பாடத்திட்டத்தில் மாற்றம்: என்சிஇஆர்டி முடிவு

புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி முடிவு செய்துள்ளது.

பாடத்திட் டதை மறு ஆய்வு செய்வற்கான குழு இந்த மாத இறுதியில் அமைக்கப் படவுள்ளது. இதுதொடர்பாக என்சிஇஆர்டி இயக்குநர் ரிஷிகேஷ் சேனாபதி கூறியதாவது: புதிய தேசிய கல்விக் கொள்கையின் இறுதி வடிவத்துக்காக காத்தி ருக்கிறோம். இறுதி வடிவம் தயாரானதும் அதன் அடிப்படையில் என்சிஇ ஆர்டி பாடத்திட்டங்கள் மறு ஆய்வு செய்யப்படும். அதன் பின்னர் புதிய பாடத்திட்டத்தின்படி பாடநூல்கள் வெளியிடப்ப டும். என்சிஇஆர்டி பாடத்திட்டத்தில் மாற்றம் செய்து 14 ஆண்டுகள் ஆகிவிட்டன. பாடத்திட்டத்தில் மாற்றம் செய்வது குறித்து கடந்த 2 ஆண்டுகளாக ஆலோசனை செய்து வந்தோம்.

தற்போது புதிய தேசியக் கல்வி கொள்கை வெளியிடப்படுவதால், பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டிய சூழல் கட்டாயமாகிவிட்டது. பாடத்திட்டத்தின் எந்தெந்த பகுதிகளில் மாற்றம் செய்யலாம் என் பது குறித்தும், பாடநூல்களின் தரம் குறித்தும் கணக்கெடுப்பு நடத்தப் பட்டு வருகிறது. ஷில்லாங், மைசூரு, ராஜஸ்தான், ஒடிஸா உள்ளிட்ட இடங்களில் இந்தக்கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதன் முடிவுகள் கிடைத்ததும், அதை அடிப்படையாகக் கொண்டு பாடநூல்கள் மறு பதிப்பு செய்யப்படும் என்று அவர் கூறினார். இதற்கு முன்னர், கடந்த 1975, 1988, 2000, 2005 ஆகிய ஆண்டுகளில் பாடத்திட்டங்களில் என்சிஇஆர்டிமாற்றம் கொண்டு வந்தது. மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையிலும், என்சிஇஆர்டி பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment