முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர் வுக்கான விடைக்குறிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை : ஆசிரியர் தேர்வு வாரி யத்தால் முதுகலை பட்ட தாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை-1க்கான கணினி வழி தேர்வு 27.09.19, 28.09.19 மற்றும் 29.09.2019 ஆகிய மூன்று நாட்கள் நடத்தப்பட்டது. தற்பொ ழுது தேர்வுக்கான கேள் விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb. tn.nic ல் வெளியிடப்பட்டு உள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக உத்தேச விடைக் குறிப்பின் மீது தேர்வர்கள் ஏதேனும் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பினால் 7ம் தேதி முதல் 09ம் தேதி மாலை 5.30 மணிக்குள் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தள முகவரியில் மட்டும் ஆதாரங்களுடன் பதிவு செய்ய வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பாடப் புத்தகங்கள் மற்றும் மேற் கோள் புத்தகங்களை மட் டுமே ஆதாரம் மட்டுமே அளிக்க வேண்டும். கையே டுகள் மற்றும் தொலைதூர கல்வி நிறுவனங்களின் வெளியீடுகள், ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட் டாது. தபால் அல்லது பிற வழி முற்றயீடுகள் ஏற்கப் படமாட்டாது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment