விஜயதசமி: அக்.8-இல் அங்கன்வாடி, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவு

விஜயதசமி யையொட்டி அக்.8-ஆம் தேதி அரசுப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களைத் திறந்து வைத்து மாணவர் சேர்க்கையை நடத்து மாறு பள்ளிக் கல்வித்துறை உத்த ரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் தனி யார் பள்ளிகளில் நிகழ் கல்வி யாண்டுக்கான மாணவர் சேர்க் கையைகடந்த செப்.30-ஆம் தேதி யுடன் முடித்துக் கொள்ளுமாறு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத் தியிருந்தது. இந்நிலையில் தமிழகம் முழு வதும் விஜயதசமி நாளில் (செவ் வாய்க்கிழமை) 3 வயது பூர்த்திய டைந்த குழந்தைகளை அரசின் அங்கன்வாடி மையங்களில் மழ லையர் வகுப்புகளிலும், 5 வயது பூர்த்தி அடைந்த குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலும் சேர்க்கலாம் என பள் ளிக் கல்வித்துறை தெரிவித்துள் இது குறித்து அதிகாரிகள் கூறு கையில், விஜயதசமியன்று பெற் றோர் தங்கள் குழந்தைகளை பள் ளியில் சேர்த்து கல்வி கற்றலை தொடங்கி வைக்க உகந்த நாளாக கருதுகிறார்கள். இதை கருத்தில் கொண்டு தமி ழக அரசின் சார்பில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப் பட்டுள்ள 2,381 அங்கன்வாடி மையங்கள், அரசுத் தொடக்கப் பள்ளிகளை அன்றைய தினம் திறந்து வைத்து மாணவர் சேர்க் கையை நடத்தவேண்டும் என பள் ளித் தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே இதுவரை குழந்தை களை பள்ளிகளில் சேர்க்காத பெற்றோர் இந்த வாய்ப்பை பயன் படுத்தி தங்களது குழந்தைகளை விஜயதசமி தினத்தில் அங்கன் வாடி மற்றும் அரசுப் பள்ளிகளில் சேர்க்கலாம். விஜயதசமி நாளில் மாணவர் சேர்க்கை நடத்த எந்தத் தடையும் இல்லை என்றனர்.

No comments:

Post a Comment