8,462 தற்காலிக ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு அரசாணை வெளியீடு

பள்ளிக்கல்வித் துறையின் எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின் கீழ் நியமனம் செய்யப்பட்ட 1,590 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ. திட்டத்தின் கீழ் நியமனம் செய்யப்பட்ட 6,872 பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 8,462 ஆசிரியர்களுக்கு 2022-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி வரை 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித் துறை பிறப்பித்துள்ளது.

2011-2012-ம் கல்வியாண்டில் 8,462 ஆசிரியர்களும் தற்காலிகமாக அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளுக்கு நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக பணி முடிவடைந்து விட்டது. அதைத் தொடர்ந்து மீண்டும் 3 ஆண்டுகள் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அதிகபட்ச ஊதியமாக ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 600 ரூபாயும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு அதிகபட்ச ஊதியமாக ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 700 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment