உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

முதுநிலை யோகா பட்டப்படிப்பு: வரும் 7-ஆம் தேதி முதல் விண்ணப்பம்

முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான ஆன் லைன் விண்ணப்பப்பதிவு வரும் திங்கள்கிழமை (அக். 7) முதல் தொடங்குகிறது. இதுகுறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை வெளியிட்ட அறிவிப்பு: அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு பாரம் பரிய மருத்துவமனை வளாகத்தில் உள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் இள நிலை படிப்புகளுக்கு 60 இடங்கள் உள்ளன. அதேபோன்று முதுநிலை படிப்புகளுக்கும் சில இடங்கள் உள்ளன. இந்நிலையில், முதுநிலை படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் வரும் 7 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. www.tnhe alth.org ஆகிய இணையதளங்களின் வாயிலாக விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யலாம் அல் லது யோகா - இயற்கை மருத்துவக் கல்லூரிக ளில் நேரடியாகவும் பெற்றுக் கொள்ளலாம். வரும் 18-ஆம் தேதி வரை விண்ண ப்ப விநி யோகம் நடைபெறும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அன்றைய தினம் மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். முதுநிலை யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு வரும் 20ஆம் தேதி நடைபெறும் என்று பாரம்பரிய மருத் துவத் துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment