உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Wednesday, October 9, 2019

மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு 

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர் களுக்கு அகவிலைப் படி 5 சதவீதம் உயர்த்தி வழங் கப்படும் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப் புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித் துள்ளார். இது மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளிப் பரிசாக அமைந்துள்ளது.

டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட் டுள்ளது. கூட்டத்துக்குப் பின்னர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படி 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப்படி யானது 12 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக உயர்த் தப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், சுமார் 62 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். இந்த அகவிலைப்படி உயர்வு, கடந்த ஜூலை மாதத்தில் இருந்து கணக்கிடப்பட்டு ஊழியர்களுக்கும், ஓய் வூதியதாரர்களுக்கும் வழங்கப்படும்.

அகவிலைப்படி உயர்வை அமல்படுத்துவதன் மூலம், மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.16 ஆயிரம் கோடி செலவாகும்.

இதுதவிர கிராமப்புறங்களில் மருத்துவ சேவை செய்யும் ஆஷா தொழிலாளர்களின் சம்பளத்தை 1,000 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக, அதாவது இரு மடங்காக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அரசின் இந்த அறிவிப்பு மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் தீபாவளிப் பரிசாக அமைந்துள்ளது.

No comments:

Post a Comment