உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Wednesday, October 23, 2019

5 மாவட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி யுனிசெஃப்- சமூகக் கல்வி நிறுவனம் தகவல்

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரி யர்களுக்கு வளரிளம் பருவ குழந்தைகளை கையாளுவது, புரிந்து கொள்வது குறித்து பயிற்சி அளிக் கப்படவுள்ளது. இந்தப் பயிற்சியை ஐ.நா. வின் யுனிசெஃப் அமைப்பு, சமூ கக் கல்வி நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தவுள்ளன. சமூகக் கல்வி நிறுவனம் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி களை வலுப்படுத்தும் வகையில் கடந்த ஐந்து ஆண்டுக ளாக பள்ளிக் கல்வித்துறை மற் றும் யுனிசெஃப் அமைப்புடன் இணைந்து 'குழந்தை நேயப் பள்ளிகள்' திட்டத்தை பள்ளிகளில் செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக குழந்தை நேயப்பள்ளித் திட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தன்னார்வ மாக முன்வந்த 60 அரசுப் பள்ளி கள் தேர்வு செய்யப்பட்டு இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான அறிமுகக் கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதையடுத்து சமூகக் கல்வி நிறு வனத்தின் இயக்குநர் ஜெ.ஷியாம் சுந்தர் செய்தியாளர்களிடம் கூறியது: குழந்தைநேயப் பள்ளி என் பது அனைத்துக் குழந்தைகளுக்கும் சம வாய்ப்பை வழங்குகின்ற, கல்வி என்பது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதை உறுதி செய்கின்ற பள்ளியாக இருக்க வேண்டும். ஆக, அது அரசுப் பள்ளியாக மட்டும்தான் இருக்க முடியும்.

அதனால் தான் அரசுப் பள்ளிகளில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தைகளின் ஒட்டுமொத்த உரிமைகளைப் பாதுகாத்து தரமான கல்வி வழங்குவதை இந்தத் திட்டம் உறுதி செய்கிறது. குழந்தை மைய கற்றல், ஆசிரியர் முன்னேற்றம் உள்ளிட்ட 5 முக்கிய அம்சங்களை மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கங்கள் ஆகும். புதிய திட்டம் அறிமுகம்.அ டுத்த கட்டமாக அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களின் நலன் கருதி அந்தப் பள்ளி களின் ஆசிரியர்களுக்கு 'வளரி ளம் பருவ குழந்தை நேயப் பள்ளி கள் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இந்தத் திட்டம் குறித்து சென்னை , காஞ்சிபுரம், திருவள் ளூர், நீலகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்ட தலா 50 பள்ளிக ளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்தப் பயிற்சியின்போது பள்ளிகளில் வளர் இளம்பருவ குழந்தைகளின் உளவியல் சார்ந்த பிரச்னைகளை எவ்வாறு புரிந்து கொள்வது, பாதிக்கப்பட்ட குழந்தைகளை கையாளும் முறை, பிரச்னைகளுக்கு தீர்வு காணுதல் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

திருவண்ணாமலையில் அக்.21, நீலகிரியில் அக்.25, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட் டங்களில் அக்.30-ஆம் தேதி பயிற்சி முகாம்கள் நடைபெறும். அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த ஆசி ரியர்கள் இதில் பங்கேற்கவுள்ள னர் என்றார். இந்தப் பயிற்சி முகாமில், திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் சுடரொளி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துராணி உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.

No comments:

Post a Comment