சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களின்  அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி யுனிசெப் - சமூக கல்வி நிறுவனம் இணைந்து வழங்குகிறது

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு குழந்தைகளைக் கையாள்வதற்கான உளவியல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியை யுனிசெப் - சமூகக் கல்வி நிறுவனம் இணைந்து வழங்க உள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த பள்ளிக்கல்வித் துறை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப் அமைப்புடன் இணைந்து ‘குழந்தை நேயப் பள்ளிகள்’ திட்டத்தை சமூகக் கல்வி நிறுவனம் உருவாக்கியுள்ளது. முதல்கட்டமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 60 அரசுப் பள்ளிகளில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான பயிற்சி முகாம் சென்னை எழும்பூர் இக்சா மையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 60 பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கலந்து கொண்ட னர். அவர்களுக்கு திட்டம் குறித்த வழி காட்டு நெறிமுறைகளை சமூகக் கல்வி நிறுவன இயக்குநர் ஜெ.ஷியாம் சுந்தர் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து குழந்தைகளுக் கும் சம வாய்ப்பை வழங்கும் கல்வியே குழந்தை நேயப் பள்ளி திட்டத்தின் முக்கிய அம்சமாகும். இதன்மூலம் குழந்தைகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு தரமான கல்வி வழங்கப்படும். அதற்கான பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு வழங்கப் படும். இதையடுத்து அரசுப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் நலன்கருதி ஆசிரியர் களுக்கு ‘வளரிளம் பருவ குழந்தை நேயப் பள்ளிகள்’ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தின்கீழ் சென்னை, நீலகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணா மலை ஆகிய மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்ட தலா 50 பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு, மாணவர்களின் உள வியல் பிரச்சினைகளை எவ்வாறு புரிந்து கொள்வது மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தை களைக் கையாளும் முறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும். இம்மாதம் 21-ம் தேதி முதல் இப்பயிற்சிகள் தொடங்க உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment