5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு விலக்கு அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

திருவாரூர் பெருகவாழ்ந் தான் அனையடி கிராமத் தில் அமைச்சர் செங்கோட் டையன் அளித்த பேட்டி: அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நாடு முழுவதும் மத்திய அரசால் அமல்ப டுத்தப்பட்டுள்ளது. பல மாநிலங்கள் அதனை பின்பற்றி இந்த ஆண்டே பொதுத் தேர்வை கொண்டு வந்துள்ளது.

அந்த திட்டத்தில் இருந்து தமிழகத்திற்கு 3 ஆண்டுகள் விலக்கு பெறப்பட்டுள்ளது.மத்திய அரசின் திட் டம் குறித்து தமிழகத்தில் உள்ள கல்வியாளர்கள், மக்கள் மற்றும் பெற்றோர்க ளின் கருத்து கேட்கப்பட்ட பிறகு தான் அந்த திட்டம் அமல்படுத்தப்படும். 11 மற் றும் 12ம் வகுப்பு கணினி ஆசிரியர்கள் நியமிப்பது தொடர்பான வழக்கு நீதி மன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தீர்ப்பு வந்தவுடன் விரைந்து கணினி ஆசிரியர்கள் தேர்வு செய் யப்படு வார்கள். தமிழக மாணவர்களின் எதிர்கா லம் பிரகாசமாக அமைவ தற்கு ஏற்ப பள்ளி கல்வித்துறையில் ஏராளமான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன்பிறகு தஞ்சையில் அமைச்சர் செங்கோட் டை யில் கூறுகையில், *உயர்நிலை, மேல் நிலை பள்ளிகளில் வகுப்பறை கள் முழுவதும் கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் வசதி இம்மாத இறுதிக்குள் அளிக்கப்படும். முதல் 8ம் வகுப்பு வரை 7500 பள்ளிகளில் வகுப்புகள் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளாக அடுத்த மாத இறுதிக்குள் மாற்றப்படும்.

90 ஆயிரம் பள்ளிகளில் டிசம்பர் மாத இறுதிக்குள் கரும்பலகை அகற்றிவிட்டு ஸ்மார்ட் போர்டு வசதி செய்யப்படும். மாணவ மாணவிகள் ஆங்கிலத்தில் சரளமாக பேச 1000 ஆங்கில வார்த் தைகள் பயிற்றுவிக்கும் பணி விரைவில் தொடங் கப்படும்' என்றார். 

No comments:

Post a Comment