கவுரவ பேராசிரியர்கள் 303 பேரை நியமிக்க அரசு அனுமதி

உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா வெளியிட்டுள்ள அரசாணை:

நடப்பு கல்வியாண்டில் (2019-20) அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2,653 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் நிரப்பப்பட உள்ளன. அதுவரை கல்லூரி மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் 303 கவுரவ பேராசிரியர்களை தற்காலிகமாக நியமித்துக் கொள்ள கல்லூரி கல்வி இயக்குநர் கருத்துரு வழங்கியுள்ளார்.

அதையேற்று பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறை களின்படி 11 மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக 303 கவுரவ பேராசிரியர்களை பணி அமர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. கவுரவ பேரா சிரியர்களுக்கு மாத ஊதியமாக ரூ.15,000 வழங்க வேண்டும்.

No comments:

Post a Comment