குரூப்-2 நேர்காணல் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் வெளியீடு 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேர்வாணையத்தின் செய்தி அறிவிப்பு 2018 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு-II (நேர்காணல் பதவிகள்) (தொகுதி-II பணிகள்) ல் அடங்கிய 1338 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால், 10.8.2018 ஆம் நாளிட்ட அறிவிக்கையின் வாயிலாக தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. மேற்காணும் நியமனத்திற்கான முதல் நிலைத்தேர்வு 11.11.2018 அன்றும் மற்றும் முதன்மை எழுத்துத்தேர்வு 23.02.2019 அன்றும் நடைபெற்றன. மேற்படி பதவிக்கு விண்ணப்பதாரர்கள் அவர்களது விண்ணப்பங்களில் தெரிவித்துள்ள விவரங்களைச் சரிபார்க்கும் பொருட்டு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேரகாணலுக்கு 2667 விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் எதிர்வரும் 06.11.2019 முதல் 30.11.2019 வரை (சனக்கழமைகள சென்னை-3. எண.3, தேரவாணைய சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. ர்பு மற்றும் நேர்காணல் தேர்விற்கு அழைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அழைப்பாணை (Notice of Interview') தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், மேற்படி அழைப்பாணையினை தேர்வாணையத்தின் இணையதளத்திலிருந்து (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்து அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் நேரகாணலில் தவறாது கலந்து கொள்ள வேண்டும். ஒதுக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளத் தவறும் விண்ணப்பதாரர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என்றும் அவர்கள் அடுத்த கட்ட பரிசீலனைக்கும் கருதப்படமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. நாள்: 30.10.2019 செயலாளர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். .

No comments:

Post a Comment