அசாம் மாநிலத்தில் 2 குழந்தைக்குமேல் பெற்றால் அரசு வேலை கிடையாது பா.ஜ.க. முதல்வர் உத்தரவு

அசாம் மாநிலத்தில் 2 குழந்தைக்கு மேல் பெற்றால் அரசு வேலை கிடையாது என்று பா.ஜனதா அரசு உத்த ரவிட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வரு கிறது. முதல்வராக சர்பா னந்தா சோனோவால் உள் ளார். இந்த நிலையில் அசா மில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு அரசு வேலை கிடையாது என்ற உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

அசாம் மாநில அரசு கடந்த 2017-ம் ஆண்டு மக்கள் தொகையை கட்டுப்படுத் தும் வகையில் கொள் கையை நடை முறைப்ப டுத்த முடிவு செய்தது. அதன் படி சிறிய குடும்பத்துக்கு ஊக்கம் அளித்து வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் அசாம், சட்டசபையில், 2 குழந்தைகளுக்கு மேல் உள் ளவர்கள் பஞ்சாயத்து தேர்த லில் போட்டியிட முடியாது என்ற மசோதா நிறைவேற் றப்பட்டது. இந்த நிலையில் மக்கள் தொகை கொள்கை தொடர்பாக முதல்வர் சர்பானந்தா சோனோவால் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந் தது.

மக்கள் தொகை கொள்கை குறித்து நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தின் படி இதில், 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் இரண்டு குழந்தைக ளுக்கு மேல் உள்ளவர்கள் அரசு வேலைக்கு விண்ணப் பிக்க தகுதி இல்லை . தற்போது அரசு பணியில் இருப்பவர்களும் இந்த விதியை பின்பற்ற வேண் டும் என்ற உத்தரவு அம லுக்கு வந்துள்ளது. மேலும் நிலங்கள் இல்லாத அசாம் மக்களுக்கு அரசு நிலம் வழங்குவது மற்றும் வீடு கட் டுவதற்கு நிலம் வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட் டது. இலவசமாக வழங்கப்ப டும் நிலங்களை 15 ஆண்டுக ளுக்கு விற்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment