குரூப் 2 தேர்வுக்கு சென்னையில் இலவச பயிற்சி

குரூப் 2 தேர்வுக்கு சென்னையில் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக பி.டி.லீ.செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

பி.டி.லீ.செங்கல்வராய நாயக்கர் அறக் கட்டளை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பி.டி.லீ.செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின்கீழ் இயங்கும் போட்டித் தேர்வுக்கான சிறப்பு பள்ளியில் இலவச பயிற்சி வகுப்புகள் அக்டோபர் 13-ம் தேதி முதல் வார கடைசி நாட்கள் சனி, ஞாயிறுகளில் சென்னை வேப்பேரியில் உள்ள பி.டி.லீ.செங்கல்வராய நாயக்கர் பாலிடெக்னிக் வளாகத்தில் நடத்தப்பட உள்ளன.

விருப்பமுள்ளவர்கள் அக்.13-ம் தேதி காலை 10.30 மணிக்குள் பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.

சிறப்பு மையத்தின் 044-26430029, 8668038347 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்புக் கொண்டும் முன்பதிவு செய்யலாம். ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான எஸ்.எஸ்.ஜவகர் தேர்வுக்கான வழிகாட்டுதல் பயற்சிகளை வழங்குவார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment