ஊட்டியில் மருத்துவக் கல்லூரிக்கு 25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு 

ஊட்டியில் வாகன நிறுத்தம் அமைப்பதற்காக மெட்ராஸ் ரேஸ் கிளப்பிடம் உள்ள நான்கரை ஏக்கர் நிலத்தை திருப்பி ஒப்படைக்கும்படி நீலகிரி ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதை எதிர்த்து மெட்ராஸ் ரேஸ் கிளப் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் அடங்கிய அமர்வில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள், அவசர மருத்துவ தேவையை கருத்தில்கொண்டு ஊட்டியில் இருந்து கோவைக்கு ஏர்-ஆம்புலன்ஸ் இயக்குவது குறித்தும், ஊட்டியில் மருத்துவக் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை அமைப்பது குறித்தும் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு அதே அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப் போது அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ‘‘ஊட்டியில் மருத்துவக் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை அமைக்க 25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும்’’ என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘ஊட்டியில் மருத்துவக் கல்லூரி அமைக்க 25 ஏக்கர் நிலம் ஒதுக்கி தமிழக அரசு எடுத்த நடவடிக்கை பாராட்டுக்குரியது. அடுத்தகட்ட நடவடிக்கை களை அரசு மேற்கொள்ள வேண்டும். அதுவரை அவசர மருத்துவத் தேவைகளுக்கு ஏர்-ஆம் புலன்ஸ் சேவையை தொடங்குவது குறித்து மத்திய விமான போக்குவரத்துத் துறை செயலர் பதிலளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசார ணையை நவ.4-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

No comments:

Post a Comment