மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்களுக்கு விருது 21-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள், நிறுவனங்களுக்கு தமிழக அரசு விருதுகள், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான வரும் டிசம்பர் 3-ந்தேதி வழங்கப்படுகிறது. குறிப்பாக சிறந்த பணியாளர், சுயதொழில் புரிபவர், மாற்றுத்திறனாளிகளுக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர், சிறந்த சமூகப் பணியாளர், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம், மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய சிறந்த நிறுவனம், ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பணியாற்றும் சிறந்த ஆசிரியர் என மொத்தம் 15 விருதுகள் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்களுடன் வழங்கப்படுகிறது.

விருதுகள் பெற, மாற்றுத் திறனாளிகளுக்கான நல ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், எண்.5, காமராஜர் சாலை, லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம், சென்னை-5. அல்லது www.scd.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து அல்லது அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அவர்களிடம் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் பரிந்துரை பெற்று மாற்றுத்திறனாளிகளுக்கான நல ஆணையருக்கு வரும் 21-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment