இடைத்தேர்தல்: நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் 21-ந்தேதி அரசு விடுமுறை

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி இந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு அன்றைய தினம் அரசு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அங்கு செயல்படும் தொழில்நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், அரசு மற்றும் அரசு கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்கள் அன்றைய தினம் மூடப்பட வேண்டும்.

இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளை உள்ளடக்கிய நெல்லை, விழுப்புரம் மாவட்டங்களிலும், பக்கத்து மாவட்டங்களிலும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களாக அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் இருக்கும்பட்சத்தில் அவர்கள் அன்றைய தினம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment