போக்குவரத்து, மின்வாரியம் உள்ளிட்ட பொதுத் துறை ஊழியர்களுக்கு 20% போனஸ் தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகை அறிவிக்கப்பட் டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரசு ஊழியர்களுக்கு 2018-19 ஆண்டுக்கான போனஸ், கருணைத் தொகை வழங்கப்படும். திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-ன்படி, போனஸ் பெறத் தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், போனஸ் கணக்கிட மாதாந்திர சம்பள உச்சவரம்பும் ரூ.7 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதிபெற்ற தொழிலாளர்களுக்கு 8.33 சதவீத போனஸ், 11.67 சதவீத கருணைத் தொகை என மொத்தம் 20 சதவீத போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

லாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலா ளர்களுக்கு போனஸ், கருணைத் தொகையுடன் மொத்தம் 20 சதவீதம் வரையும், பிற கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் பணி யாளர்களுக்கு 8.33 சதவீதம் குறைந்தபட்ச போனஸ், 1.67 சதவீதம் கருணைத் தொகை வழங்கப்படும்.

அரசு ரப்பர் கழகம், தமிழ்நாடு வனத்தோட்ட கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், கூட்டுறவு, பொதுத் துறை சர்க்கரை ஆலைகள், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 8.33 சதவீத போனஸ் மற்றும் 11.67 சதவீத கருணைத் தொகையோ அல்லது 8.33 சதவீத போனஸ் மற்றும் 1.67 சதவீத கருணைத் தொகையோ வழங்கப்படும்.

இதுதவிர, தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர் களுக்கு ரூ.4 ஆயிரமும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரமும், போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவு சங்கங்களில் பணி புரியும் தொழிலாளர்கள், மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிர மும், தொடக்கக் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலா ளர்களுக்கு ரூ.2,400-ம் கருணைத் தொகையாக வழங்கப்படும்.

இவ்வாறு குறைந்தபட்சம் ரூ.8,400, அதிகபட்சமாக ரூ.16,800 போனஸ் தொகை வழங்கப்படும். இதன்மூலம், 3.48 லட்சம் பணி யாளர்கள் பயன்பெறுவார்கள்.

No comments:

Post a Comment