குரூப்-2 புதிய பாடத்திட்டம் சத்யா ஐஏஎஸ் அகாடமியில் நாளை இலவச கருத்தரங்கம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணை யம் (டிஎன்பிஎஸ்சி) சில தினங்களுக்கு முன் குரூப்-2 மற்றும் 2ஏ ஆகிய தேர்வுகளை இணைத்து புதிய பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறைகளை அறிமுகப்படுத்தியது. இதுதொடர்பாக போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்த சந்தேகங்களைப் போக்கும் இலவச கருத்தரங்கம் அரும்பாக்கம் என்.எஸ்.கே. நகரில் இயங்கிவரும் சத்யா ஐஏஎஸ் அகாடமியில் நாளை (அக்.5) நடக்க உள்ளது. இக்கருத்தரங்கில் புதிய பாடத்திட்டத்தில் உள்ள சாதகமான அம்சங்கள், அணுகும் முறை, புதிய தேர்வு முறையின் அமைப்பு, தேர்வுக்கு தயாராகும் முறை, புதிதாக சேர்க் கப்பட்டுள்ள பகுதிகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் ஆகியவை குறித்து அனுபவம் வாய்ந்த நிபுணர்களால் விளக்கப் படவுள்ளது. கருத்தரங்கின் முடிவில் புதிய தேர்வு முறைக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட வினாத்தாள், அடுத்த 3 மாதங்களுக்கான தேர்வு அட்டவணை ஆகியவை வழங்கப்படும். இதில் பங்கேற்க விரும்புவோர் 044-26222360, 9043056747, 7397247683 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment