உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Saturday, October 5, 2019

15, 16-ந்தேதிகளில் நடக்கிறது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 7-ம் கட்ட தேர்வு தென் மண்டலத்தில் 34,272 பேர் எழுதுகிறார்கள்

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம், தேர்வு செய்யப்பட்ட பணியிடங்களுக்கு 7-ம் கட்டமாக கணினி வழி தேர்வினை நடத்த உள்ளது. தென் மண்டலத்தில் இந்த தேர்வு ஆந்திர மாநிலம் விஜயவாடா, விசாகப்பட்டினம், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மற்றும் தமிழகத்தில் சென்னை ஆகிய 4 நகரங்களில் உள்ள 11 இடங்களில் வருகிற 15 மற்றும் 16-ந்தேதிகளில் நடைபெற உள்ளது.

ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் 11 மணி வரை, பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை மற்றும் பிற்பகல் 4 மணி முதல் 5 மணி வரை என 3 ஷிப்டுகளில் தேர்வுகள் நடைபெறுகிறது. தென் மண்டலத்தில் இந்த தேர்வினை எழுதுவதற்கு 34 ஆயிரத்து 272 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் (நுழைவுச்சீட்டு) தேர்வு நடைபெறும் தேதிக்கு 4 நாட்களுக்கு முன்னதாக மட்டுமே பதிவிறக்கம் செய்யமுடியும்.

கைக்கெடிகாரம், புத்தகங்கள், காகிதங்கள், பத்திரிகைகள், செல்போன், புளுடூத், ஹெட்போன், கால்குலேட்டர் போன்ற மின்னணு சாதனங்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படாது. தேர்வு எழுதுபவர்கள் இவற்றில் ஏதேனும் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவருடைய தேர்வு ரத்து செய்யப்படுவதோடு, 3 முதல் 7 ஆண்டு காலத்துக்கு தேர்வில் இருந்து ஆணையத்தால் விலக்கியும் வைக்கப்படுவார்கள்.

மேற்கண்ட தகவல் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணைய தென்மண்டல இணைச் செயலாளரும், மண்டல இயக்குனருமான கே.நாகராஜா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment