‘14417 எண்ணுக்கு வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை’ 

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி யின் மாநில திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக் கும் அனுப்பப்பட்டுள்ள சுற்ற றிக்கை:

தலைமை ஆசிரியர்கள் பள்ளி இறைவணக்கக் கூட்டத்தில் இல வச எண் 14417 குறித்து எடுத் துரைத்து மாணவர்களிடம் விழிப்புணர்வு உருவாக்க வேண் டும். அதன்படி 14417 எண்ணுக்கு வரும் அழைப்புகளில் சந்தேகம், ஆலோசனை குறித்த தீர்வுகளை இலவச உதவி மைய பணி யாளர்களே வழங்குவர்.

14417 எண்ணுக்கு வரும் கல்வி, வேலைவாய்ப்பு குறித்த புகார்கள், குறைகள், சம்பந்தப் பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு கல்வியியல் மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) இணையதளம் மூலம் அனுப்பப்படும். தாமதிக்காமல் அதன்மீது தனிக்கவனம் செலுத்தி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment