அரசுப் பள்ளிகளில் அக்.14, 15-ல் அறிவியல் கண்காட்சி பொதுமக்கள் பார்வையிடலாம்

பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி), தமிழக பள்ளிக் கல்வித் துறை ஆகியவை சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளில் வரும் 14, 15-ம் தேதிகளில் 47-வது ஜவஹர்லால் நேரு அறிவியல், கணித, சுற்றுப்புறக் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. மேலும், 15-ம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜெ அப்துல் கலாம் பிறந்த நாள் விழாவும் (இளைஞர் எழுச்சி நாள்) அனைத்துப் பள்ளிகளிலும் கொண்டாடப்பட உள்ளது.

பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆசிரியர்கள், மாணவர்கள், அறிவியல் ஆர்வலர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலோடு அறிவியல் கண்காட்சி சிறப்பாக நடத்தப்பட உள்ளது. பள்ளிகளுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள், பெற்றோர் கண்காட்சியைப் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே, கண்காட்சியில் பொதுமக்கள் பங்கேற்று மாணவர்களின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க வேண்டும்.

அறிவியல் கண்காட்சியில் மாற்றுத்திறனாளி மாணவர்களின் சிறந்த படைப்புகளுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. வருவாய் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு தேர்வு செய்யப்படுவர்

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment