யோகா - இயற்கை மருத்துவப் படிப்பு: நாளை (அக்.12) இரண்டாம் கட்ட கலந்தாய்வு

யோகா-இயற்கை மருத்துவப்படிப்புகளுக்கான இரண்டாம் கட்டகலந்தாய்வு சனிக்கிழமை (அக்.12) நடைபெறுகிறது. இதில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் பங்கேற்று இடங்களைப் பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு, தனியார் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூ ரிகளில் பி.என்.ஒய்.எஸ். எனப்படும் இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு 600-க்கும் மேற்பட்ட இடங் கள் உள்ளன. குறிப்பாக, அரும்பாக்கம் அறிஞர் அண்ணா இயற்கை மருத்துவத் துறை வளாகத்தில் உள்ள அரசு யோகா கல்லூரியில் 60 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு 408 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 192 இடங்களும் உள்ளன. இந்நிலையில், அந்தப் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு அண்மையில் நடைபெற்றது. அதில் 467 இடங்கள் நிரம் பின. 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். இந்தச் சூழலில், கலந்தாய்வில் இடங்கள் பெற்று கல்லூரிகளில் சில மாணவர்கள் சேராததால் ஏற்பட்ட காலியிடங்களை இரண்டாம் கட்ட கலந்தாய்வு மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டது. - அதன்படி, வரும் சனிக்கிழமை சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவத் துறை வளாகத்தில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது.

No comments:

Post a Comment