10,11,12ம் வகுப்புகளில் தோல்வியுற்ற மாணவர்கள் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதலாம் துணைத்தேர்வு அட்டவணை வெளியீடு


  • பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி தோல்வி அடைந்த மாணவர்கள் மீண் டும் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதலாம் என தேர்வுத்துறை அறிவித் துள்ளது. இதற்கான அட்டவணையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. 
  • பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளை பழைய பாடத்திட்டத் தில் எழுதி தேர்ச்சி பெறாத மாணவர் களின் நலன் கருதி, மார்ச் 2020, ஜூன் 2020 மாதங்களில் நடக்க உள்ள தேர்வுகளை பழைய பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. 
  • அதன்படி, கடந்த தேர்வுகளில் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி தோல்வி அடைந்த மாணவர்கள் மார்ச், ஏப்ரல் 2020 மாதத்தில் நடக்க உள்ள பிளஸ் 1, பிளஸ்2 (600 மதிப்பெண்) மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை பழைய பாடத் திட்டத்தின் கீழ் தேர்வு எழுதலாம். இதற்கான தேர்வு அட்டவணை தற் போது வெளியிடப்பட்டுள்ளது. 
  • இதன்படி, பழைய பாடத்திட்டத் தின் அடிப்படையில் பிளஸ்2 தேர்வு கள் மார்ச் 2ம் தேதி தொடங்கி 24ம் தேதி முடிவடையும். 
  • பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 4ம் தேதி தொடங்கி 26ம் தேதி முடிவடையும். 
  • பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 27ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13ம் தேதி முடிவடையும். 

பிளஸ் 2 தேர்வு அட்டவணை 
மார்ச் 2 மொழிப்பாடம்
மார்ச் 5 ஆங்கிலம்
மார்ச் 9 கணக்கு, விலங்கியல் வணிகவியல்,
மார்ச் 12 தொடர்பு ஆங்கிலம், கணினி அறிவியல், உயிரிவேதியியல், சிறப்பு தமிழ், புள்ளியியல்
மார்ச் 16 இயற்பியல், பொருளியல், தொழில் பாடங்கள்
மார்ச் 20 உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிககணிதம்
மார்ச் 24 வேதியியல் கணக்குப் பதிவியல், புவியியல்

பிளஸ் 1 தேர்வு அட்டவணை 
மார்ச் 4 மொழிப்பாடம்
மார்ச் 6 ஆங்கிலம்
மார்ச் 11 கணக்கு, விலங்கியல், வணிகவியல், தொழில்பாடங்கள் தொடர்பு ஆங்கிலம், கணினி அறிவியல்
மார்ச் 13 உயிரி வேதியியல் சிறப்பு தமிழ், அரசியல் அறிவியல் புள்ளியியல் மார்ச் 18 இயற்பியல், பொருளியல், தொழில் பாடங்கள்
மார்ச் 23 உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் தொழில் பாடங்கள்
மார்ச் 26 வேதியியல், கணக்குப்பதிவியல் தொழில்பாடம், புவியியல்

பத்தாம் வகுப்பு அட்டவணை
மார்ச் 27 மொழிப்பாடம்
மார்ச் 28 விருப்ப பாடம்
மார்ச் 31 ஆங்கிலம்
ஏப்ரல் 3 சமூக அறிவியல்
ஏப்ரல் 7 அறிவியல்
ஏப்ரல் 13 கணக்கு

No comments:

Post a Comment