உணவுப்படி மற்றும் இலவச தங்குமிடத்துடன் கூடிய IAS/IPS இலவசப் பயிற்சி.

அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணிகள் பயிற்சி அகாடமி இளைஞர் நல படிப்பியல் துறை மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், மதுரை ரூ.2000/- உணவுப்படி மற்றும் இலவச தங்குமிடத்துடன் கூடிய IAS/IPS இலவசப் பயிற்சி மதுரை காமராஜர் பல்கலைக் கழக இளைஞர் நலப் படிப்பியல் துறையினால் தமிழ்நாடு அரசு நிதியுதவியுடன் நடத்தப்பட்டு வரும் அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணிகள் பயிற்சி அகாடமியில் ஐ.ஏ.எஸ்/ஐ.பி.எஸ் உள்ளிட்ட அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான முதனிலைத் தேர்வுகளுக்கான (Preliminary Examination) பயிற்சி வகுப்புகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாண்டின் UPSC Prelims-2020 க்கான பயிற்சி வகுப்புகளுக்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தெரிவுத் தேர்வு (Screening Test) எதிர்வரும் 10-112019 ஞாயிற்றுக்கிழமை மு.ப 10.30 முதல் 12.30 பி.ப முடிய நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள விரும்புவோர் ஏதாவதொரு அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். 1.8.2020 -ல் 21 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும். தெரிவுத் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களில் கூடுதல் மதிப்பெண் பெற்ற முதல் நூறு நபர்கள் தமிழ்நாடு அரசின் இனச்சுழற்சி (Communal Rotation) முறையில் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படுவர்.

இவர்களுக்கான பயிற்சி 2.12.2017 அன்று துவங்கி 30.5.2020 வரை நடத்தப்படும். இக்காலங்களில் இவர்களுக்குப் பயிற்சி, முழுக்க முழுக்க இலவசமாகும்; வெளியூர் நபர்களுக்கு தங்குமிடம் மற்றும் மாதந்தோறும் உணவு ஊக்கத்தொகை ரூ.2000/- வழங்கப்படும்.

நுழைவுத்தேர்வில் இந்திய வரலாறு மற்றும் இந்திய தேசிய இயக்கம், இந்தியா மற்றும் உலக புவியியல், இந்திய அரசியலமைப்பு மற்றும் நிர்வாக முறை, பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி, பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், சுற்றுப்புற சூழ்நிலை தொடர்பான பொது விவாதங்கள், உயிரின பரிணாம வளர்ச்சி, பருவநிலை மாற்றங்கள், ஆங்கிலம் மற்றும் பொதுதிறனறித் தேர்வு ஆகியவற்றில் கேட்கப்படும் 100 கொள்குறி (Objectibe Type) வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். பயிற்சியில் சேர விழைவோர் அதற்கான “விண்ணப்ப படிவங்களை” மதுரை காமராஜர் பல்கலைக் கழக வலைதளமான www.mkuniversity.ac.in -லிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விண்ணப்பதாரரின் படிப்பு, வயது, பிறந்த தேதி, இனம், நிரந்தர முகவரி ஆகியவைகளுக்கான சான்றிதழ்களின் ஜெராக்ஸ் நகல்களை மனுவுடன் இணைத்தனுப்ப வேண்டும். ரூ5/- அஞ்சல்முத்திரை ஒட்டப்பட்ட மற்றும் சுயமுகவரி எழுதப்பட்ட இரண்டு அலுவலகக் கவர்கள் இணைத்தனுப்பவேண்டும். அஞ்சல் கவர்களின்மேல் "UPSC-Prelims 2020 க்கான பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்பம்” என்று எழுதப்பட்டு "பயிற்சி இயக்குநர்/ஒருங்கிணைப்பாளர், அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணிகள் பயிற்சி அகாடமி, இளைஞர் நல படிப்பியல் துறை, மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், மதுரை-625021” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அனுப்பிட இறுதிநாள்: 10.10.2019 வியாழக்கிழமை ஆகும். காலம் கடந்து அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இப்பயிற்சி மையத்தில் எற்கனவே முதல் நிலைத் தேர்வுக்கு முழு நேர பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். மேலும் விபரங்களுக்கு: 0452-2458231/9865655180 எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment