பொறியியல் கல்லூரி பேராசிரியர்களுக்கும் கட்டாய சிறப்பு தகுதித்தேர்வு நடத்த முடிவு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் அறிவிப்பு

பொறியியல் கல்லூரிகளில் பேராசி ரியராக பணிபுரிய ஓராண்டு இணையதள சிறப்பு படிப்பில் தேர்ச்சி பெற வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) அறிவித்துள்ளது.

நம்நாட்டில் பொறியியல் கல் லூரிகளில் பேராசிரியராக பணி புரிய முதுநிலை பொறியியல் பட் டப்படிப்பு தகுதியாக நிர்ணயிக் கப்பட்டுள்ளது. அந்த விதிமுறை களில் அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) தற்போது மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

அதன்படி, பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரிய ராக பணிபுரிய இனி ஓராண்டு சிறப்பு படிப்பு கட்டாயமாக்கப்பட் டுள்ளது.

இதுகுறித்து ஏஐசிடிஇ தலை வர் அனில் டி சஹஸ்ரபுத்தே கூறியதாவது: முதுநிலை பட்டம் பெற்றுள்ள பட்டதாரிகள் ஏஐசிடிஇ நடத்தும் ஓராண்டு இணையதள சிறப்பு படிப்பில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இனி பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியராகப் பணிபுரிய முடியும்.

ஏற்கெனவே பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியராகப் பணிபுரிபவர்கள் பதவி உயர்வு பெறும்போது இந்தத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொறியியல் படிப் பின் தரத்தை உயர்த்தவும் மாண வர்களின் கற்றல் திறனை அதிக ரிக்கவும் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்படுகிறது.

இதேபோல், வளரும் தொழில் நுட்பங்களுக்கு ஏற்ப அவ்வப் போது அனைத்து பல்கலைக் கழகங்களிலும் பாடத் திட்டங்கள் மாற்றப்படும். அவை மாணவர் களை சுயமாக சிந்திக்கத் தூண் டும் வகையில் அமைய வேண்டும்.

மேலும், பொறியியல் கல்வி யில் புதிய பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்தும் முயற்சியாக நடப்பு கல்வி ஆண்டு முதல் பிடெக் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் பிரிவுகள் என்ற படிப்பு தொடங்கப்பட உள்ளது. மேலும், புதிதாக பணியில் சேரும் பேராசிரியர்களுக்கு 6 மாத கால சிறப்பு பயிற்சிகளும் அளிக் கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment