உதவி பேராசிரியர் பணி: விண்ணப்பிக்க தேதி ஒத்திவைப்பு

அரசு கலை, அறிவியல் கல்லூரி களில் காலியாக உள்ள 2,340 உதவி பேராசிரியர் பணியிடங் களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) ஆக.28-ல் அறிவிப்பு வெளியிட்டது.

நேர்முகத் தேர்வு மூலம் நிரப் பப்பட உள்ள இந்த இடங்களுக் கான விண்ணப்பப் பதிவு தேர்வு வாரிய (www.trb.tn.nic.in) இணை யம் வழியாக செப்.4 (இன்று) முதல் தொடங்கும் என அறிவிக் கப்பட்டு இருந்தது. இந்நிலையில் விண்ணப்பிப்பதற்கான தேதி திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி டிஆர்பி வெளி யிட்ட அறிவிப்பில், தொழில்நுட்பக் கோளாறால் விண்ணப்பிக் கும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறியுள்ளது.

No comments:

Post a Comment