பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவு

தமிழக பள்ளிக்கல்வியில் 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாண வர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது.

இந்நிலையில் தேர்வுத் துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘‘நடப்பு கல்வி ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் விவரங்களை அனைத்து வகை பள்ளிகளில் இருந்தும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் சேகரித்து தேர்வுத் துறை அலுவலகத்துக்கு செப்டம்பர் 13-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இதில் காலதாமதம் செய்யக் கூடாது. மேலும், பட்டியலில் எந்த மாணவரின் பெயரும் விடு படாமல், அவர்கள் வேறு பள் ளிக்கு மாறியிருந்தாலும் அதன் விவரங்களையும் வழங்க வேண் டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment