அத்திவரதர் சிறப்பு மலர் விற்பனை இந்து சமய அறநிலையத் துறை தகவல்

ஒரே மாதத்தில் ரூ.6 லட்சம் மதிப் பிலான 1,000 அத்திவரதர் சிறப்பு மலர் விற்பனை செய்யப்பட் டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெரு மாள் கோயிலில் உள்ள வசந்த மண்டபத்தில் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் அத்திவரதர் எழுந் தருளி பக்தர்களுக்கு அருள்பாலித் தார். ஆகஸ்ட் 17-ம் தேதியுடன் வைபவம் நிறைவு பெற்று அங் குள்ள அனந்தசரஸ் குளத்தில் அத்தி வரதர் வைக்கப்பட்டார். அத்திவர தர் வைபவத்தில் 1 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இதற்கிடையே, அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் அத்திகிரி சிறப்பு மலர் கடந்த மாதம் 7-ம் தேதி தமிழக முதல்வர் பழனிசாமியால் வெளி யிடப்பட்டது. இந்த புத்தகத்தில் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அருள்பாலிப்பதற்கான வரலாறு, அனந்தசரஸ் குளத்தில் வைப்பதற்கான காரணம், ஸ்தல வரலாறு உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

சிறப்பு இதழில் தமிழ், ஆங்கி லம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் தகவல்கள் அச்சிடப் பட்டுள்ளன. இப்புத்தகம் காஞ்சி புரம் வரதராஜப் பெருமாள் கோயி லிலும், இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்தின் மூலமும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரே மாதத்தில் ரூ.6 லட்சம் மதிப்பிலான சுமார் 1,000 புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒரு வர் கூறியதாவது:

அத்திகிரி சிறப்பு மலர் ஆன் லைன் மற்றும் காஞ்சிபுரம் வரத ராஜப் பெருமாள் கோயிலில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள் ளது. ஒரே மாதத்தில் ரூ.6 லட்சம் மதிப்பிலான 1,000 புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஒரு புத்தகம் ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆன்லைனில் முன்பதிவு செய் யப்படும் புத்தகங்கள் ஒரு வாரத் துக்குள் பக்தர்களிடம் ஒப்படைக் கப்பட்டு வருகின்றன. தேவைக்கு ஏற்ப அவ்வப்போது அச்சடித்து பக்தர்களுக்கு வழங்கி வருகிறோம். பக்தர்களும் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment