நிறுவன வரி குறைப்பைத் தொடர்ந்து தனிநபர் வருமான வரி குறைக்கப்பட வாய்ப்பு

இந்தியாவின் தற்போதைய பொருளாதார மந்தநிலையை எதிர்கொள் ளும் விதமாக மத்திய அரசு கடந்த வாரம் நிறுவனங்களுக்கான நிறு வன வரியை 10 சதவீதம் அளவில் குறைத்தது. இந்நிலையில் பொரு ளாதார வளர்ச்சியை மேலும் ஊக்கு விப்பதற்காக தனி நபர் வருமான வரி விகிதமும் குறைக்கப்பட உள்ள தாக தகவல்கள் வெளியாகி உள் ளன. வரி விகிதம் தொடர்பாக உரு வாக்கப்பட்ட பணிக் குழு மத்திய அரசிடம் இந்தப் பரிந்துரையை முன்வைத்துள்ளது.

அதன்படி, ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று அந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது. தற்போது ரூ.2.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இந்தப் பரிந்துரையால், அந்த வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

அதேபோல், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஆண்டு வரு மானம் உடையவர்களுக்கு 10 சத வீத அளவிலும், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை ஆண்டு வருமானம் உடையவர்களுக்கு 20 சதவீத அளவிலும் வரி விதிப்பு மேற்கொள்ளலாம் என்று பரிந் துரை செய்யப்பட்டு உள்ளது.

ரூ.20 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை ஆண்டு வருமானம் உடைய வர்களுக்கு 30 சதவீத வரியும் ரூ.2 கோடிக்கு மேல் ஆண்டு வரு மானம் உடையவர்களுக்கு 35 சத வீத வரியும் விதிக்க வேண்டும் என்று அந்தப் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்தியாவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்தப் பொருளாதார மந்த நிலையால் மக்களின் வாங்கும் திறன் குறைந் துள்ளது. இதனால் நிறுவனங் களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட அளவில் முதலீடுகளும் வரவில்லை. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டு வளர்ச்சி வீதம் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவீதமாக குறைந்தது. இந் நிலையில் மத்திய அரசு பொரு ளாதார மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய கட்டா யத்துக்குத் தள்ளப்பட்டது.

கடந்த வாரம் நிறுவனங்களுக் கான நிறுவன வரி 30 சதவீதத் தில் இருந்து 22 சதவீதமாக குறைக் கப்பட்டது. புதிதாக தொடங்கப் படும் உற்பத்தி நிறுவனங்களுக் கான வரி 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப் பட்டது. இந்நிலையில் தனிநபர் வருமான வரியை குறைப்பதன் மூலமே நுகர்வை அதிகரிக்க முடியும் என்ற நிலையில் தனி நபருக்கான வருமான வரியை குறைக்க பரிந்துரை செய்யப் பட்டுள்ளது.ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஆண்டு வருமானம் உடையவர்களுக்கு 10 சதவீத அளவிலும், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை ஆண்டு வருமானம் உடையவர்களுக்கு 20 சதவீத அளவிலும் வரி விதிப்பு மேற்கொள்ளலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment