தமிழகத்திற்கு பொதுத்தேர்வு கிடையாது - செங்கோட்டையன் அதிரடி

5 மற்றும் 8 வகுப்புக்கு பொதுத் தேர்வில் இருந்து 3 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.ஆனால் இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியுள்ளது.

இந்த நிலையில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,

அனைவருக்கும் கல்வி திட்டம் என்று மத்திய அரசு கொண்டு வந்திருக்கின்ற 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு என்பது நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டிய ஒரு நிலை உள்ளது.தமிழகத்திற்கு அதை மனதில் வைத்துக்கொண்டுதான்,5 மற்றும் 8 வகுப்புக்கு பொதுத் தேர்வில் இருந்து 3 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கப்படும்.எனவே 3 ஆண்டு காலத்தில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பு உருவாகி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment