ஐஐடி நுழைவுத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்ப பதிவு தொடக்கம் 

ஐஐடி ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நேற்று தொடங்கியது. தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்.30-ம் தேதி கடைசி நாள் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள் ளது.

ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிஇ, பிடெக் படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வு மெயின் தேர்வு, அட்வான்ஸ்டு தேர்வு என இரு தேர்வுகளை உள்ளடக்கியது. மெயின் தேர்வை தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் இரு தடவை (ஜனவரி, ஏப்ரல்) நடத்துகிறது.

இந்நிலையில், 2020-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக் கான முதலாவது ஜேஇஇ மெயின் தேர்வு ஜனவரி 6 முதல் 11 வரை நடைபெற உள் ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது. ஜெஇஇ நுழைவுத்தேர்வு எழுத விரும் பும் மாணவர்கள் http://nta.ac.in என்ற இணையதளம் வழி யாக ஆன்லைனில் விண்ணப் பிக்க வேண்டும். விண்ணப் பங்களை சமர்ப்பிக்க செப்.30 கடைசி நாள் ஆகும். தேர்வுக் கான ஹால்டிக்கெட் டிசம்பர் 6-ம் தேதி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தேர்வு முடிவு ஜனவரி 31-ம் தேதி வெளியிடப்படும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று என்டிஏ அறிவித்துள்ளது. தொடர்ந்து 2-வது மெயின் தேர்வு ஏப்ரல் 3 முதல் 9-ம் தேதி வரை நடைபெறும்.

No comments:

Post a Comment