பள்ளிக்கல்வி துறை இயக்குனர்கள் மாற்றம்

தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை இயக்குனர் மற்றும் அதுபோன்ற பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி பணியிட மாறுதல் வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனராக இருந்த வி.சி.ராமேஸ்வரமுருகன், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குனராகவும், தொடக்கக்கல்வி இயக்குனராக இருந்த அ.கருப்பசாமி, மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குனராகவும், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குனராக இருந்த எஸ்.சேதுராமவர்மா, தொடக்கக்கல்வி இயக்குனராகவும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆணை உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.

மேற்கண்ட தகவல் பள்ளிக்கல்வி துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment