எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு புதிய அட்டவணை வெளியீடு

அரசு தேர்வுகள் துறை இயக்குனர் சி.உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மாணவர்களின் மன அழுத்தத்தினை குறைக்கும் வகையிலும், ஆசிரியர்களை பெருமளவில் கற்பித்தல் மற்றும் கல்வி மேம்பாட்டு பணிகளில் அதிக நேரம் ஈடுபடுத்தும் வகையிலும் 2019-20-ம் கல்வியாண்டு முதல், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தமிழ், ஆங்கிலம் இருதாளாக தேர்வு எழுதும் நடைமுறையை ஒருங்கிணைத்து, ஒரே தாளாக தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு வெளியிட்டது.

இதன் தொடர்ச்சியாக மார்ச், ஏப்ரல்-2020 எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கான திருத்தப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியிடப்படுகிறது. இந்த தேர்வு அடுத்த ஆண்டு(2020) மார்ச் மாதம் 27-ந்தேதி தொடங்கி, ஏப்ரல் மாதம் 13-ந்தேதியுடன் முடிவடைகிறது.

அதன் விவரம் வருமாறு:-

மார்ச் 27-ந்தேதி(வெள்ளிக்கிழமை) - தமிழ், 28-ந்தேதி(சனிக்கிழமை) - விருப்ப பாடம், 31-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) - ஆங்கிலம், ஏப்ரல் 3-ந்தேதி(வெள்ளிக்கிழமை) - சமூகஅறிவியல், 7-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) - அறிவியல், 13-ந்தேதி(திங்கட்கிழமை) - கணிதம்.

தேர்வு முடிவு மே மாதம் 4-ந்தேதி வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment