காலாண்டு வினாத்தாள் வெளியானதால் தேர்வுத் துறை மீது அதிருப்தி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஆசிரியர்கள் வலியுறுத்தல்

தேர்வுக்கு முன்னதாக பிளஸ் 1 காலாண்டுத் தேர்வு வினாத்தாள் தொடர்ந்து வெளியாகி வருவதால் ஆசிரி யர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அரசு தேர்வுத்துறை விசாரணை நடத்தி நட வடிக்கை எடுக்குமாறு அவர்கள் வலி யுறுத்தி உள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத் தின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் 10, 11, 12-ம் வகுப்பு களுக்கான காலாண்டுத்தேர்வு செப்டம் பர் 12-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வுகள் இன்றுடன் (23-ம் தேதி) முடிவடைகின்றன. இதற் கிடையே, ஒரு செல்போன் செயலி யில் பிளஸ் 1 காலாண்டு வினாத் தாள்கள் தேர்வுக்கு முன்ன தாகவே வெளியானதாக தகவல்கள் பரவின. ஆனால், இதை மறுத்த அரசு தேர்வுத்துறை, முறைகேடுகள் இன்றி தேர்வுகளை நடத்தி முடிக்கவும், ஏதேனும் புகார்கள் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதேநேரம் பிளஸ் 1 காலாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்ன தாகவே வலைதளங்களில் வெளியா வது தொடர்வதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அரசுப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கூறும்போது, ‘குறிப்பிட்ட செல்போன் செயலியில் கல்வி என்ற பகுதியில் தேர்வு வினாத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. வணிகவியல், கணினி பயன்பாடு, பொருளாதாரம் உட்பட பல்வேறு பாடப்பிரிவுகளுக்கான வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்னரே வெளியாகின. செயலியில் இடம்பெற்ற கேள்வித் தாளும், தேர்வறையில் மாணவர் களுக்கு வழங்கிய வினாத்தாள்களும் ஒரே மாதிரியாகவே இருந்தன. பார்ப்ப வர்களுக்கு அவை பழைய வினாத் தாள்கள் போல் தெரிவதற்காக போலி யாக மாணவர் பதிவெண்களை எழுதி எடிட் செய்து பதிவேற்றம் செய்துள்ளனர்.

ஒரு பெற்றோர் தன் மகன் தின மும் வலைதளங்களில் வரும் வினாத் தாள்களை மட்டும் படித்து தேர்வு எழுதுவதாக புகார் தெரிவிக்கிறார். திங்கள்கிழமை (இன்று நடைபெற உள்ள கணக்குப்பதிவியல் உட்பட பாடங்களின் வினாத்தாள்களும் வெளி யாகியுள்ளன. காலாண்டுத் தேர்வு என்பதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ஆர்வம் காட்டுவதில்லை. அதேநேரம் பிளஸ் 1 மாணவர்களும் பொதுத்தேர்வு எழுத இருக்கின்றனர். நீட் உட்பட நுழைவுத் தேர்வுகளுக்கு பிளஸ் 1 பாடத்திட்டமே அடிப்படை என்பதால் மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படும். எனவே, இந்த விவகாரத் தில் தேர்வுத்துறை விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றனர்.

இதுதொடர்பாக தேர்வுத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

பிளஸ் 1 தேர்வு வினாத்தாள்கள் வடிவமைக்கப்பட்டு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு மின் னஞ்சல் மூலம் அனுப்பப்படும். வினாத் தாள்களை அச்சிட மண்டல வாரியாக தனியார் அச்சகங்களுடன் ஒப்பந்தம் செய்யபட்டுள்ளது. வினாத்தாள்களை அந்த அச்சகங்களில் அச்சிட்டு மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் 10 முதல் 15 பள்ளிகளுக்கு மையமாக இருக்கும் நோடல் பள்ளிகளில் ஒப்படைக்கப்படும். தேர்வு நாளான்று சம்பந்தபட்ட பள்ளி பொறுப்பாளர்கள் வினாத்தாள்களை சேகரித்துச் செல்வர். குறைவான மாண வர்கள் படிக்கும் சில தொழிற்பிரிவு பாடங்களுக்கும் மட்டும் வினாத்தாள் நேரடியாக பள்ளிகளுக்கு மின்னஞ்சல் அல்லது குறுந்தகடு மூலம் அனுப் பப்படும்.

பள்ளி தலைமையாசிரியர்கள் தேர்வு நாளான்று அதை நகல் எடுத்து மாணவர் களுக்கு வழங்குவர். இதற்கிடையே வினாத்தாள்களை அச்சிடும் அச்சகங் கள் பெரும்பாலானவை ஆளும்கட்சி யினருக்கு சொந்தமானவை. சமீப கால மாக தரமற்ற வகையிலும், தேவைக் கும் குறைவாகவும் வினாத்தாள்களை அச்சிட்டு வழங்குகின்றனர். இதனால் பல நேரங்களில் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வினாத்தாள்கள் வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால் தலைமையாசிரியர்கள் கேள்வித்தாள்களை அருகே தனியார் இணையதள மையங்களில் நகல் எடுத்து வழங்க வேண்டியுள்ளது. அவ்வாறு நகல் எடுக்கும்போது வினாத்தாள் வெளியாகி இருக்கலாம்.

மேலும், தனியார் அச்சகங்கள் மூலம் மாணவர்களுக்கு வினாத்தாள்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன. இதுகுறித்து விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment