வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி

வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கும் அரசியல் சட்டத்தின் 371-வது பிரிவை ரத்து செய்ய மாட்டோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலம் குவாஹாட்டி யில் 8 வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொண்ட வடகிழக்கு கவுன்சிலின் 68-வது கூட்டம் நேற்று நடந்தது. இதில் அமித் ஷா பேசியதாவது:

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டவுடன் வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கும் அரசியல் சட்டத்தின் 371-வது பிரிவும் ரத்து செய்யப்படும் என்று தவறான பொய் பிரச்சாரம் நடக்கிறது.

இது வடகிழக்கு மாநிலங்களின் மக்களை திசை திருப்பும் முயற்சி. காஷ்மீருக்கான 370-வது பிரிவு இயற்கையிலேயே தற்காலிகமானது. தற்போது அந்த சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் ஒருங்கிணைந்த இந்தியா உறுதியாகி உள்ளது. ஆனால், 371-வது பிரிவு அப்படி அல்ல. நான் நாடாளுமன்றத்திலேயே தெளிவாக அறிவித்தேன். இப்போது, 8 வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர்கள் முன்னிலையில் மீண்டும் கூறுகிறேன். வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு சலுகை கள் அளிக்கும் அரசியல் சட்டத்தின் 371-வது பிரிவு ரத்து செய்யப்படாது. மத்திய அரசுக்கு அதுபோன்ற எண்ணம் இல்லை.

தேசிய குடிமக்கள் பதிவேட்டுப் பணிகள் தொடங்கப்பட்டு உரிய காலத்துக்குள் முடிக்கப்பட்டு விட்டன. வடகிழக்கு மாநிலங்களில் சட்ட விரோதமாக குடியேறியவர் கள் இந்தியாவில் தங்க அனுமதிக் கப்பட மாட்டார்கள். இந்தக் கொள்கையில் அரசு உறுதியாக உள்ளது.

இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.371-வது பிரிவு அளிக்கும் பாதுகாப்பு

வடகிழக்கு மாநிலங்களில் உள்ள நாகா இன மக்கள் உள்ளிட்ட பழங்குடியினருக்கான உரிமைகள், கலாச்சாரம், நில உரிமை ஆகியவற்றுக்கு அரசியல் சட்டத்தின் 371-வது பிரிவு பாதுகாப்பு அளிக்கிறது. மக்கள் தங்கள் மதம் மற்றும் சமூக பழக்கவழக்கங்கள், பாரம்பரிய நடைமுறைகள் ஆகியவற்றை பின்பற்றும் உரிமைகளை வடகிழக்கு மாநில மக்களுக்கு இந்தப் பிரிவு உறுதி செய்கிறது. இந்த சிறப்பு சலுகைகளைத்தான் மத்திய அரசு ரத்து செய்யப்போவதாக சமீப காலமாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளிவந்தன. அதை திட்டவட்டமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மறுத்துள்ளார்.

No comments:

Post a Comment