மேல்நிலைக் கல்வி பிரிவுக்கு இணை இயக்குநர் நியமனம் 

பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் நேற்று வெளியிட்ட அரசாணையில், ‘‘பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துரு அடிப்படையில் காலி யாக உள்ள இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங் களை தற்காலிகமாக நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி முன்னுரிமையில் உள்ள சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி த.ராஜேந்திரன், பள்ளிக்கல்வி இணை இயக்குநராக (மேல் நிலைக்கல்வி) தற்காலிகமாக பதவி உயர்வு செய்யப்படுகிறார். இதையடுத்து காஞ்சிபுரம் முதன்மை கல்வி அதிகாரி சென்னை மாவட்டத்தையும் கூடுத லாக கவனித்துக் கொள்வார்’’ என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment