உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Tuesday, September 10, 2019

தீபாவளி பண்டிகை வரை பள்ளி அருகே பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க வேண்டும் பள்ளி கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை

பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் நரேந்திர மோடியின் பிளாஸ்டிக் எதிர்ப்பு வேண்டுகோளுக்கு இணங்க, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று (புதன்கிழமை) முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பிளாஸ்டிக் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும்.

மேலும் 1-ந் தேதி வரை, ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்தல், பயன்பாட்டில் இருந்து நீக்குதல், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பொருட்களை சேகரித்து மறுசுழற்சிக்கு உட்படுத்துதல் தொடர்பாக மாணவர்களுக்கு உரிய விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்த வேண்டும்.

பள்ளி வளாகம் மற்றும் அதற்கு அருகாமையில் உள்ள இடங்களில் இருந்து, ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க வேண்டும். அக்டோபர் 3-ந் தேதி முதல் 27-ந் தேதி தீபாவளி பண்டிகை வரை பிளாஸ்டிக் கழிவுகளை உள்ளூர் தன்னார்வலர்களின் உதவியுடன் சேகரித்து, மறுசுழற்சிக்கு உட்படுத்த வேண்டும்.

பிளாஸ்டிக் பொருட்களை மாணவர்கள், உள்ளூர் தன்னார்வலர்களுடன் இணைந்து சேகரித்தல், அவற்றை மறுசுழற்சி செய்தல் உள்ளிட்ட நிகழ்வுகளை புகைப்படம் எடுத்து, Go-o-g-le Dr-ive மூலம் பள்ளி கல்வித்துறை இயக்குநரகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும், பிளாஸ்டிக் எதிர்ப்பு விழிப்புணர்வு தொடர்பாக உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment