விஐடி நுழைவுத் தேர்வில் அடுத்த ஆண்டு முதல் திறனாய்வு பிரிவு சேர்ப்பு

விஐடி நுழைவுத் தேர்வில் அடுத்த கல்வி ஆண்டு (2020- 2021) முதல் திறனாய்வு ( Aptitude Test ) பிரிவு சேர்க்கப்படுகிறது.

இது தொடர்பாக விஐடி பல் கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: விஐடி பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத் தேர்வில் இதுவரை ஆங்கிலம், கணிதம், வேதியியல், இயற்பியல், உயிரியல் ஆகிய பாடப் பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டு வந்தன. 2020-2021-ம் கல்வி ஆண்டு முதல், மேற்கூறிய பாடப் பிரிவு களுடன் திறனாய்வு பிரிவு சேர்க் கப்பட்டு, அதில் இருந்தும் கேள்வி கள் இடம்பெற உள்ளன. தொழில் வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர் களின் பரிந்துரைப்படி இந்த பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் உள்ள முன்னோடி பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மாணவர்களின் திறனாய்வு திறனை பரிசோதிக்க இந்த பிரிவை நுழைவுத் தேர்வுக ளில் வைத்துள்ளன. ஆக இந்த நுழைவுத் தேர்வில் இயற்பியல் - 35, வேதியியல் - 35, கணிதம் அல்லது உயிரியல் - 40, திறனாய்வு - 10, ஆங்கிலம் - 5 என கேள்விகள் கேட் கப்படும். நுழைவுத் தேர்வின் கால அளவு 2.30 மணி நேரமாகும். இந்த நுழைவுத் தேர்வில் நெகடிவ் மதி பெண் கிடையாது.

புதிய நுழைவுத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் விரைவில் விஐடியின் www.vit.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப் படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment